TVK: விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் தற்போது வரை முடிவில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை மாநாட்டில் தொண்டர்களுக்கு எந்த வசதியெல்லாம் செய்து கொடுக்க முடியவில்லையோ அவை அனைத்தையும் தற்போது குறையில்லாமல் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு மாநாடு நடத்த அனுமதி அளிக்காத வரை பல இடர்பாடுகளை திமுக மறைமுகமாக கொடுத்து வந்தது.
மேலும் வேறு எந்த வகையில் எல்லாம் தொந்தரவு செய்ய முடியும் என்பதை வியூகித்து மறைமுக செயல்முறையிலும் இறங்கியுள்ளது. அந்த வகையில் மாநாட்டிற்கு அக்ரிமெண்ட் போடப்பட்டிருந்த நாற்காலிகள் கடைசி நேரத்தில் வரவில்லை. உடனடியாக கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது. இது ரீதியான செய்திகள் நேற்றிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று திடீர் உத்தரவு நீதிமன்ற வாயிலாக வரலாம் என கூறுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் கூட்டத்தை குறைக்கும் வகையில் நேர வரையறை இருக்கும் எனவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கான திடீர் உத்தரவு வரும் என்றும் கூறுகின்றனர். அதாவது பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க அவரை ஊருக்குள் கூட விடவில்லை. மேற்கொண்டு பேசும் நேரத்தையும் மிகவும் குறைத்து தான் கொடுத்திருந்தனர். அந்த அளவிற்கு திமுகவின் அழுத்தம் இருந்தது.
தற்போது அதேபோல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு மக்களின் நலன் எனக்கூறி நேர கட்டுப்பாட்டை இறுதி நேரத்தில் கொண்டு வரலாம் எனக் கூறுகின்றனர். இவையனைத்தும் திமுகவின் மறைமுக சதி திட்டம் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.