ADMK TVK: சட்டமன்ற தேர்தல் இம்முறை புதிய போட்டி முனைகளை சந்திக்க உள்ளது. எப்பொழுதும் அதிமுக இல்லையென்றால் திமுக என இருந்த நிலையானது மாறப்போகிறது என்று பேசி வருகின்றனர். அதிமுக திமுகவை தாண்டி பல கட்சிகள் இருந்தாலும் பொதுப்படையான கட்சி என்பதில்லை. தற்போது விஜய் தொடங்கி இருக்கும் கட்சியானது மக்களின் சேவையை நாடி தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறுகின்றனர்.
அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாரோ இல்லையோ ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பின்னுக்கு தள்ளப்பட அதிக வாய்ப்புள்ளது. இது ரீதியாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசுகையில், அதிமுகவுடன் ஏன் தவெக வை ஒப்பிடுகிறேன் என்றால் இவர்கள் இருவரும் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடுபவர்கள் தான்.
அதிலும் தற்போது அதிமுகவின் நிலையானது மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த தேர்தலில் தெற்கு பகுதியில் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு கிடையாது. அதுமட்டுமின்றி சசிகலா, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறக்கூடும். இதனையெல்லாம் தாண்டி தமிழகத்தில் பாஜக மீது பெரும் அதிருப்தி உள்ள நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதெல்லாம் அதிமுக வை பின்னுக்கு தள்ளி தவெக வை முன்னோக்கி அனுப்பும்.
மேலும் பொதுமக்களுக்கு அதிமுக திமுகவை தவிர்த்து வேறு கதி இல்லை என நினைத்ததற்கு தற்சமயம் புதிய கட்சி இருப்பதால் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணுகின்றனர். மேலும் கூட்டனியிலிருப்பவர்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் தர இருப்பதால் மாற்று கட்சி மத்தியில் தவெக விற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறுவதை விட அதிமுக வை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் 2 வது மாபெரும் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.