ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

0
107
#image_title
ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!!
ரோஹித் சர்மா அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நடப்பு உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றது.
குஜராத்தில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசம் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். மேலும் முகம்மது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீரர் சுப்மான் கில் மற்றும் விராட் கோஹ்லி தலா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன்பிறகு ரோஹித் சர்மாவுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடத் தொடங்கினார்.
இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியை மூன்றாவது வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர். ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து 53 ரன்கள் எடுத்தார். கே.எல் ராகுல் 19 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 30.3 ஓவர்களில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் வீழ்ந்த விக்கெட்டுகளில் ஷாகீன் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும், ஹசன் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி உலகக் கோப்பை தொடர்பு மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 19ம் தேதி நடிக்கும் லீக் சுற்றில் வங்கதேச அணியை எதிர்கொள்கின்றது.
Previous articleஅவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!
Next articleஅக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!