அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

0
57
#image_title

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கிய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் அக்டோபர் 2வது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டு உள்ளது.
இன்னும் சில தினங்களில் தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகவுள்ள நிலையில் அதை வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்த தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும் தமிழகத்தில் அதிகளவு மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதிக்குள் தொடங்கிய வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதை வரவேற்கும் விதமாக தற்பொழுது தமிழகத்தில் தென்பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று(அக்டோபர்15) முதல் அக்டோபர் 20ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் நாளை(அக்டோபர்16) மற்றும் நாளை மறுநாள்(அக்டோபர் 17) ஆகிய இரண்டு தினங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.