பண மோசடி விவகாரம்! முன்னாள் அமைச்சர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு!

Photo of author

By Sakthi

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சார்ந்தவர் குணசீலன் இவர் சத்துணவு மற்றும் சமூகத் துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து தன்னிடம் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். நீண்ட தினங்களுக்கு பின்னர் தற்சமயம் அந்த புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சரோஜா என்னையும், என்னுடைய மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும் ஆகவே அதற்கு பணம் வாங்கிக் கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று தெரிவித்து இதனை நம்பி தன்னுடைய மனைவி மதுரையில் நபர்களிடம் ரூபாய் 76 லட்சம் வாங்கி அதில் 50 லட்சத்தை முதல் கட்டமாக என்னுடைய வீட்டில் வைத்து வழங்கினேன் என்றே கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 26 லட்சத்து 50 ஆயிரத்தையும் வழங்கி இருப்பதாகவும், ஆனால் சரோஜா அவர் கூறியபடி என்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டார் எனவும், குணசீலன் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பணம் செலுத்தியவர்கள் தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்து வருவதாகவும், ஆகவே ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றேன். அதில் யார், யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரத்துடன் அனைத்தையும் சமர்பித்து இருக்கிறேன் என குணசீலன் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

எங்கள் சூழ்நிலைகள் தற்சமயம் சரோஜாவிற்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும், முறைகேடு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த வரிசையில் தற்சமயம் முன்னாள் அமைச்சர் சரோஜாவிற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.