தமிழக அரசு அதிரடி! இனி அனைத்து பள்ளி வாகனங்களிலும் இது கட்டாயம் இருக்க வேண்டும்!

Photo of author

By Sakthi

தமிழக அரசு அதிரடி! இனி அனைத்து பள்ளி வாகனங்களிலும் இது கட்டாயம் இருக்க வேண்டும்!

Sakthi

சென்னை ஆழ்வார்திருநகரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் தீக்ஷித் கடந்த மார்ச் மாதம் பள்ளி வேண்டில் சிக்கி உயிரிழந்தார். வேனில் மறந்து வைத்துவிட்ட பொருளை மறுபடியும் எடுக்க முயற்சி செய்தபோது ஓட்டுநர் பார்க்கிங் செய்வதற்காக அந்த வேனை பின்னோக்கி நகர்த்திய சமயத்தில் மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012ல் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

அதனடிப்படையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்தை நோக்கி நகர்த்தும் போது பின் பகுதி முழுவதும் தெள்ளத் தெளிவாக தெரியுமளவுக்கு பேருந்தின் பின் பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில் சென்சார் பொருத்தப்பட வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது.