குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்போது? இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
80

நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருக்கின்ற பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டிருக்கிறது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை மாதம் 5ஆம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாகும் என்றும், வேட்பாளர்கள் வேட்புமனவை தாக்கல் செய்ய ஜூலை மாதம் 19ஆம் தேதி கடைசி நாள் என்றும், கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை மாதம் 20ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் எனவும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஜூலை மாதம் 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் கூடியிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 18ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 9ஆம் தேதி அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்காவும், போட்டியிடுகிறார்கள்