டிசம்பர் 1ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற விருக்கும் அதிரடி மாற்றம்!

Photo of author

By Sakthi

எதிர்வரும் 3ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் வழிகாட்டு குழு கலைப்பு உட்பட கட்சியின் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் விதத்திலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

அந்த சமயத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பூபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தொடர்ந்து அவருடைய பொறுப்பில் நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட இருக்கிறது அதோடு கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையும் அமலாக இருக்கிறது, இதன் காரணமாக, ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வம் தன்னிடம் இருக்கின்ற பொருளாளர் பதவியையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவியையும் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பதவியையும் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள். துணையை ஒருங்கிணைப்பாளர்களில் பொருளாளர் பதவியும் வைத்தியத்திற்கு தலைமை நிலைய செயலாளர் பதவியையும், வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளராக இருக்கின்ற சேலம் புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கட்சியின் அமைப்பு செயலாளர்கள் 70 இற்கும் அதிகமானவர்கள் இருப்பதால் அந்த பதவிக்குரிய மரியாதை குறைந்து இருக்கிறது.

ஆகவே எம்ஜிஆர் காலத்தில் 12 அமைப்புச் செயலாளர் ஜெயலலிதா காலத்தில் 18 அமைப்புச் செயலாளர்கள் இருந்ததுபோல தற்சமயம் இரண்டு மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அமைப்பு செயலாளர் என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கையும் குறைக்கப்பட இருக்கிறது. வழி காட்டு குழு உறுப்பினராக இருப்பவர்கள் கட்சியில் குழப்பத்தை விளைவிக்கும் விதத்தில் செயல்படுவதால் அந்தக் குழுவும் கலைக்கப்படுகிறது.

இரட்டைத் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்காமல் அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் ரகளையில் ஈடுபட்டது தான் கலைப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கும் கட்சி நிறுவனர் பதவி நிரந்தரமாக எம்ஜிஆர் அவர்களுக்கும், மட்டுமே உரியது. இதன் காரணமாக, சசிகலாவுக்கு கட்சியில் நிரந்தரமான இடம் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அவைத் தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் செங்கோட்டையன் செம்மலை பொன்னையன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமனம் செய்ய இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை தவிர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம் தொடர்பாக அரசிடம் இருக்கிறது இதை தவிர உள்கட்சி தேர்தலில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகளின் மீண்டும் தேர்வு செய்வது திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து  இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் இரட்டை தலைமையில் முன்னிலையில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சசிகலாவை மறுபடியும் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பொது வெளியில் உரையாற்றியது குறித்து சண்முகம் அன்வர்ராஜா இடையே கடுமையான மோதல் உண்டானது.

இந்த விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்த அன்வர்ராஜா திமுகவில் இணைய முடிவு செய்து இருப்பதாகவும் அவரை திமுகவில் சேர்ப்பதற்கு ரகசிய பேச்சு வார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருவதாகவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.