திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பான அதிகாரிகள்!

0
103

தமிழகத்தில் தற்சமயம் நோய்த்தொற்றின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.மாநில அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சரி அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்த வேகம் தற்போது ஸ்டாலினிடம் இல்லை என்பதே தமிழகம் முழுவதும் உலாவும் செய்தியாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே முன்பைவிட தற்சமயம் இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக தமிழகத்தில் பலர் கருதி வருகிறார்கள். அதேநேரம் தமிழக அரசின் நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.இந்தநிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் நிலவரம் தொடர்பாக பல சந்தேகங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் தமிழக அரசு சார்பாக வார்ரூம் என்று சொல்லக் கூடிய கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை 104 மற்றும் 108 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு இங்கே தெரிவிக்கலாம் அதேசமயம் டிவிட்டரிலும் ஹேஸ்டேக் மூலமாக குறைகளை தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

இவ்வாறான சூழ்நிலையில் டி எம் எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மையத்திற்கு நேற்று இரவு 11 மணி அளவில் முதல் அமைச்சர் ஸ்டாலின் வருகை தந்திருக்கிறார். அங்கே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் மையத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பாக அவர் விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது. பொதுமக்களுடைய அழைப்பிற்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர், ஒரு அழைப்பை தானே பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று குறையை கேட்டறிந்து இருக்கிறார்.அதன்பிறகு கட்டளை மையத்தில் நோய்த்தடுப்பு பணிகளை எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல் செய்வதற்கு அதிகாரிகளிடம் அறிவுறுத்துகிறார் முதலமைச்சர். அவர் ஆய்வு செய்த சமயத்தில் அவருடைய செயலாளர்கள் உதயச்சந்திரன் மற்றும் உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நல்வாழ்வுத் திட்ட இயக்குனர் தரேஸ் உள்ளிட்டோர் உடனிருந்து இருக்கிறார்கள்.

Previous articleதமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான   அதிரடி அறிவிப்பு! 
Next articleஇதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!