புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் கோரிமேட்டில் இருக்கக்கூடிய சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன் ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகி இருக்கிறார்கள் அவர்களை நான் குறை சொல்லவில்லை, தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாதது வருத்தம் தருகிறது என கூறியிருக்கிறார்.
பாண்டிச்சேரி என்பது சிறிய மாநிலம் தான் ஆனாலும் ஏன் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் நின்று வெற்றி பெறும் அளவிற்கு கூட வேலை பார்க்கவில்லை? சென்ற கால புதுச்சேரி வரலாற்றைப் பார்க்கும் போது அவ்வளவு சிரமப்பட்டேன்.
புதுச்சேரியை அப்படியே விட்டுவிட்டீர்களே என்று தொலைபேசியில் ஒரு சிலர் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள். கூட்டணியில் இருந்தாலும் கூட நளினமாக திமுகவை விமர்சனம் செய்தேன், அதற்கு கருணாநிதி தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என்று பதிலளிப்பார்.
அதேபோன்று புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன், அதன் காரணமாக, எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆனால் பாதுகாவலர்களால் நான் தப்பித்தேன்.
ஆகவே கட்சி நிர்வாகிகளை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி புத்துயிர்பெற்று புதுச்சேரியில் 3 காரைக்காலில் 2 என்று ஐந்து சட்டசபை உறுப்பினர்கள் பெற வேண்டும் இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும், பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் பத்து நபர்கள் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள எதிர்வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட வேண்டும், ஆதரவு வழங்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சியை கைப்பற்றுவோம் என மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.