தமிழகத்தில் நோய்த்தொற்று தற்சமயம் அதிகமாக பரவி வருவதால் அதை கட்டுக்குள் கொண்டுவர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதேபோல பெரிய ஷாப்பிங் மால்கள் கடைகள் போன்றவற்றில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், அதேபோல இறுதி ஊர்வலங்களில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உணவகங்கள் தேனீர் விடுதிகளில் ஐம்பது சதவீத மக்கள் இரவு பதினோரு மணிவரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பேருந்துகளில் இருக்கைகளில் மற்றும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டாக்ஸியில் ஓட்டுனர் அல்லாமல் மூன்று நபர்கள் மட்டுமே பயணம் செய்யலாம், ஆட்டோவில் ஓட்டுனரை சேர்க்காமல் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
. அந்த வேகத்தில் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தருபவர்கள் கட்டாயமாக இ பாஸ் வாங்க வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டிருக்கிறது. அலுவலக பணி தொழிலில் மருத்துவம் போன்ற காரணங்களை தெரிவித்தாலும் இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல இ பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புமாறு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.