வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதற்கடுத்து பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் வாக்குபதிவு நடத்தினர்.
இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி அவர் பிரதிநிதியாக நின்று போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பல குளறுபடியகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.இந்த தேர்தலில் யார் கோட்டையை கைப்பற்ற போகிறார்கள் என கேள்வியாகவே உள்ளது.தேர்தல் வாக்குப்பதிவானது மே 2-ம் தேதி நடைப்பெற உள்ளது.இன்று தேர்தல் ஆணையர் சத்திய பிராதசாகு ஆணை ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியது,வாக்குப்பதிவானது மே 2-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கும்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக தான் உள்ளது.எங்கும் எந்த வித விதி மீறலும் நடைபெறவில்லை.வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை ஆலோசனை நடக்க உள்ளது.அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாடுகள் அதிக அளவு கடைபிடிக்கப்படும் என கூறியுள்ளனர்.சிறிய தொகுதிகளில் 13 மேஜைகளும்,பெரிய தொகுதிகளில் 30 மேஜைகளும் போடப்படும் என கூறினார்.இன்று மாலை அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் தொலைப்பேசி மூலம் கலந்துரையாட உள்ளார் என தெரிவித்தார்.இந்த ஆலோசனையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என பேசி வருகின்றனர்.