TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல்  !!

Photo of author

By Parthipan K

இனி ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்று இருந்து வந்த நிலையில், தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.,அதன்படி  இனி டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்  ஆயுள் முழுவதும்  செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டுமே தான் செயல்பாட்டில் இருக்கும்.

இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற வேண்டுமென்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது. இதனை தடுக்கும் வகையில் , கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TET தேர்வு குறித்து  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  கோரிக்கை வாய்த்த நிலையில் , இற்போது செய்த மாற்றம்  நியாயமான தீர்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .