அதிரடியான ஐபிஎல் போட்டி! இரண்டு சாதனைகளை படைத்த ராஜஸ்தான் அணி வீரர்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
நேற்று அதாவது மே 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர்களும், பந்து வீச்சில் யுசுவேந்திர சஹல் அவர்களும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
நேற்று அதாவது மே 11ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியை சேர்ந்த யுசுவேந்திர சஹல் அவர்கள் 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பறிய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன் யுசுவேந்திர சஹல் அவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ அவர்களும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தனர். இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ அவர்களை இரண்டாவது இடத்திற்கு தள்ளி சஹல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து 187 விக்கெட்டுகள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக சஹல் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற 150 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால் அதிவேக அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால் நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இவருடைய இந்த அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து கே.எல் ராகுல் அவர்களும் பேட் கம்மின்ஸ் அவர்களும் இருந்தனர். 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இவர்களின் சாதனையை முறியடித்து அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால். 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.