ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

0
108
#image_title
ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ரன் எடுக்க சிரமப்பட்டனர். ஒரு வழியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பந்துவீச்சில் சஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால் அதிரடியாக விளையாட தொடங்கினார். இவருடன் கை கோர்த்த கேப்டன் சஞ்சு சாம்சன் அவர்களும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இதையடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 13.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்ஸிவால் அரைசதம் அடித்து 98 ரன்கள் எடுத்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் 6வது வெற்றியை பெற்று 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.