ஹரோல்ட் தாஸாக மிரட்ட வரும் ஆக்சன் கிங் அர்ஜுன்… கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லியோ படக்குழு… 

Photo of author

By Sakthi

 

ஹரோல்ட் தாஸாக மிரட்ட வரும் ஆக்சன் கிங் அர்ஜுன்… கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லியோ படக்குழு…

 

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட்15) லியோ படக்குழு அவருடைய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

 

நடிகர் அர்ஜூன் 1984ம் ஆண்டு வெளியான நன்றி என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து நடிகர் அர்ஜூன் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

நடிகர் அர்ஜூன் தற்பொழுது தீயவர் குலைகள் நடுங்க, மேதாவி, தலைவர் 170 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் அர்ஜூன் அவர்கள் இன்று அவருடைய 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து லியே படக்குழு நடிகர் அர்ஜூன் அவர்களுடைய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு நடிகர் அர்ஜூன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.

 

நடிகர் அர்ஜூன் அவர்கள் லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. லியோ படக்குழு வெளியிட்டுள்ள இந்த கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வைத்து எல்.சி.யு கனெக்ட் உள்ளதா இல்லையா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.