மீண்டும் இயக்குநராக களமிறங்கிய ஆக்சன் கிங்… பேன் இந்தியன் படமாக உருவாகிறது!!

Photo of author

By Sakthi

 

மீண்டும் இயக்குநராக களமிறங்கிய ஆக்சன் கிங்… பேன் இந்தியன் படமாக உருவாகிறது…

 

நடிகர் அர்ஜூன் அவர்கள் மீண்டும் தமிழில் திரைப்படம் இயக்கத் தொடங்கியுள்ளதாகவும் பேன் இந்தியன் படமாக இந்த திரைப்படம் உருவாகின்றது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்கள் தற்பொழுது நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கவிருக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்கள் இயக்குநராக களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் அர்ஜூன் அவர்கள் அவரே தயாரித்து இயக்கும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் உபேந்திரா அவர்களின் அண்ணன் மகன் நிரஞ்சன் இந்தப்படம் மூலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

 

மேலும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஜெயராம், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை இயக்கும் இயக்குநரான நடிகர் அர்ஜூன் அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் அர்ஜூன் அவர்கள் தனது(அர்ஜூன்) தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பாக இந்த படத்தை தயாரிக்கின்றார்.

 

நடிகர் அர்ஜூன் அவர்கள் தயாரித்து இயக்கி நடிக்கும் இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பேன் இந்தியன் படமாக இயக்கி தயாரிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.