டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Photo of author

By Parthipan K

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்வதுடன் அவருடைய பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.

அதனையடுத்து திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் தொகை பல மடங்கு உயர்ந்தது.அந்தவகையில் ஹெல்மெட்,சீட்பெல்ட்அணியாமல் வாகனங்களை இயக்கினால் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து 10,000 ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த உத்தரவில் தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு நடைமுறை அமலுக்கு வந்த பிறகு 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர் என்பது வரவேற்க தக்க விஷயமாக இருந்தாலும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவதில்லை.

அதனால் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் காவல்துறையினரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பிறகு தான் வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.வாகன சோதனையில்  ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.அதனால் போலீசார் அசால்டாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.