தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி முக கவசம் கட்டாயம் மீறினால் நடவடிக்கை!

0
203
Action order issued by Tamil Nadu government! If you violate the mandatory face mask, action will be taken!
Action order issued by Tamil Nadu government! If you violate the mandatory face mask, action will be taken!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி முக கவசம் கட்டாயம் மீறினால் நடவடிக்கை!

இன்புளூயன்சா வைரஸ் பரவலானது வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களை தான் அதிக அளவில் தாக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பானது 40ஆக  கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொரோனா உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

இதனால் பாதுகாப்பு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றும் வேண்டும் எனவும்  முககவசம் கட்டாயம்  அணிய வேண்டும் என  பொது மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலைத் தொடர்ந்து மறுபுறம் எச்3என்2 வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகின்றது.

Previous articleபள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு?
Next articleபிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!