மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மார்ச் 31 வரை மட்டுமே இந்த தங்க நகை விற்க முடியும்!

Photo of author

By Parthipan K

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மார்ச் 31 வரை மட்டுமே இந்த தங்க நகை விற்க முடியும்!

தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வருகின்றது. ஹால்மார்க் முத்திரையை பெற தனித்துவம் மிக்க ஆறு இலக்க எண் 1 ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹால்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது சிறு குறு  நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆல்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும். கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலும் 90% என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள நகைகடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும்.

மேலும் மத்திய அரசு முன்னதாகவே உத்தரவிட்டது. இந்நிலையில் இம்மாதம் இறுதிவரை மட்டுமே ஹால்மார்க் இல்லாத நகையை விற்க அனுமதி உண்டு அதற்கு பின்பு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்மார்க்கின் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்க செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய உத்தரவினால் நகை கடை உரிமையாளர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். ஹால்மார்க் இல்லாத நகையை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விற்று  முடிக்க வேண்டும் எனவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தினங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதினால் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இல்லத்தரசிகள் தங்க நகை வாங்க அதிகம் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.