மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு ! ஜனவரி-5 ஆம் தேதி விடுமுறை!
குமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி-5 ஆம் தேதி அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற இடத்தில் புகழ் பெற்ற மிகவும் பழமையான தாணுமாலயன் சாமி கோவில் உள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.சிவன்,விஷ்ணு, பிரம்மா, ஆகிய முப்பெரும் கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவில் தாணுமாலயன் கோவில் என அழைக்கப்படுகிறது. மேலும் அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் இது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி மார்கழி, மற்றும் மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். மேலும் வருகின்ற ஜனவரி- 5 ஆம் தேதி இக்கோவிலில் தேரோட்ட திருவிழாவானது மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதனை காண பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் ஆண்டுதோறும் வருவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வர வாய்ப்புகள் உள்ளன.
எனவே மக்கள் இந்த திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஜனவரி-5 ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் பொருட்டு பிப்ரவரி- 25 ஆம் நாள் வேலை நாளாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.