தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் பெற்றோர்கள்
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் 1,6 மற்றும் 9 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில் , மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என்று கணிக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதால் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தால், நிர்வாகம் வழங்க மறுக்கக் கூடாது என்றும் அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.