மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தற்பொழுது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவதோடு வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒழுங்கு முறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மின் இணை ப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது வரை 50% மக்கள் மட்டுமே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
31 ஆம் தேதி முடிய இன்னும் ஆறு நாட்கள் இருக்கும் பட்சத்தில் மக்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது சந்தேகமே. எனவே இது குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை விளையாட்டு துறை அமைச்சர் முன்னிலையில் அரச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதையொட்டி இதற்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டு வருகிறார்.
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததில் அவர் கூறியதாவது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரே நாளில் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதால் அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. மேலும் 50 சதவீதம் மக்கள் மட்டுமே தற்பொழுது வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை நினைத்திருக்கும் பட்சத்தில் இதற்கான கால அவகாசமானது 31ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக இப்பணியானது 31ஆம் தேதிக்குள் முடிவடையவில்லை என்றால் இதற்கான கால அவகாசம் குறித்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வரும் 31 ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.