தவெக தலைவர் காட்டும் அதிரடி!! 100 மாவட்டச் செயலர்கள், 3 லட்சம் நிர்வாகிகள்!!

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தவெக தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவருவார் என எதிர்பார்த்த நிலையில் அது சரியாக நடத்தி வருகிறார். மேலும் அவர் தற்போது தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியகியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், தனது கவனம் முழுவதையும் தனது கட்சிக்காகவும், கட்சி சம்பந்தப்பட்ட பேட்டிகள், போராட்டங்கள் என்று இருந்தால் மட்டுமே தமிழக வெற்றிக் கழக தலைவரால் ஆட்சியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் அரசியலில் நிலைக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடிந்தவுடன் இக்கழகத் தலைவர் விஜய் அவர்கள் வருகை புரிந்த அனைத்து மக்களுக்கும் மேலும் வீட்டிலிருந்து அவருடைய மாநாட்டை கண்டு களித்த மக்களுக்கும் நன்றி கடிதம் ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்றும் கூறலாம். மேலும் அவர் தற்போது 28 சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் 100 மாவட்டச் செயலாளர்கள் என நிர்வாகிகளை நியமிக்க இருப்தாக தெரிவித்துள்ளார். மேலும் 28 சார்பு அணி கீழ்  3.25 ஆயிரம் நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரம் கூறியுள்ளது. இந்த முழு வேலைகளை இன்னும் 4 மாதத்தில் முடிக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.