இந்தியா குளோபல் வீக் 2020 மாநாடு கடந்த ஜூலை 9-ஆம் தேதி இங்கிலாந்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது.இந்தியாவின் சார்பில், பிரதமர் மோடி தலைமையில், சில முக்கியமான தலைவர்கள்,வணிகர்கள் இந்த மாநாட்டில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம்
கொரோனாத் தொற்றில் பல உண்மைகளை உலக நாடுகளுக்கு சீனா மறைத்தே ஆகும்.
இது மட்டுமின்றி இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக, உற்பத்தியில் சீனாவை சார்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுக்கக் காரணமாக அமைந்தது. இதன் உடனடி நடவடிக்கையாக 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கும் மற்றும் சில வணிக ஒப்பந்தங்களில் இருந்தும் விலகிக்கொண்டது இந்தியா.இதனால் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.
இதன் அடுத்த கட்டமாக அந்நிய நேரடி முதலீடுகளில் உள்ள விதிமுறைகளை மேலும் தளர்வு செய்ய மத்திய அரசு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பெற வேண்டிய அனுமதிக்கான விதிமுறைகள்
எளிமையாகப் படஉள்ளன என்றும் கோயல் கூறினார்.
சுரங்கத் துறையில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவையேஇத்துறையில் அந்நிய முதலீடு வருவதற்கு தடை கல்லாக உள்ளது.
சுரங்கத் துறையில் அந்நிய நேரடிமுதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையையும் அரசு விரைவில் கொண்டு வரஉள்ளது. வனத்துறை பாதுகாப்பு சட்டம் மற்றும் சில விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.இதன் மூலம் இத்துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் எளிமையாகும்.
இதுமட்டுமின்றி வங்கித் துறை, பங்குச் சந்தைகளிலும் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.கடந்த 40 நாட்களில் பொருளாதார நடவடிக்கைகள் ஏறுமுகத்தில் இருப்பதை குறியீடுகள் உணர்த்துகின்றன. இது போன்ற சில மாற்றங்களை நாம் கொண்டு வருகையில் பொருளாதார சரிவில் இருந்து இந்தியா விரைவில் மேலெழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றும் பியூஷ் கோயல் கூறினார்.