மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் வெற்றி; கொரோனாவிற்கு விரைவில் தீர்வு

0
79

உலக நாடுகள் கொரோனா தொற்றினை தடுப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளன. நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டிவந்த நிலையில், ரஷ்ய பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சொசோனோவ் பல்கலைக்கழகம் தடுப்பு மருந்தை கண்டுபித்துள்ளதாக கூறியுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனையில் வெற்றி கண்டதாகவும் ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ரஷ்யாவில் உள்ள கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பல்கலைக்கழக இயக்குனர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறுகையில்; கொரோனா பாதிப்பினை தடுக்க முதன்முதலாக தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா வந்துள்ளது.  கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்த சோதனை தொடங்கியதாகவும், இவை வெற்றிபெற்றால் முதல் சிகிச்சை எடுத்துக்கொண்ட குழுவினர் நாளை மறுநாளும், 2வது குழுவினர் வருகிற 20 ஆம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும் இந்த சோதனை முழு வெற்றி பெற்றால் உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவில் குணப்படுத்த முடியும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

author avatar
Jayachandiran