மத்திய அரசு கொண்டுவந்த பி.வி.சி புதிய ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவரும் தனது அடையாளத்திற்காக ஆதார் அட்டையை ஒரு அடையாளமாக கொண்டு யூ.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) கார்டுகளை வழங்கி வருகின்றது.
அதில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பிவிசி அட்டையை அறிமுகப்படுத்தி அச்சிடப்பட்டு வருகின்றது. பிவிசி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஆதார் அட்டை மூலம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது ஏடிஎம் கார்டு போன்றே அமைக்கப்பட்டிருக்கும் பிவிசி ஆதார் அட்டையை அமைந்திருக்கும். அதனை பெறுவதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ரூ.50/-கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பழைய ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் இருக்கும் . ஆனால், தற்பொழுது விண்ணப்பித்து வாங்கும் பிவிசி ஆதார் அட்டையில், அந்த வாசகம் இடம்பெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்தி மொழியை திணிக்கும் வகையில், மத்திய அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.