அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

Photo of author

By Sakthi

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் திட்டம் என்று தெரிவிக்கிறார்கள். அதனை முன்னிட்டு இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம் பெருங்களத்தூர் தாம்பரம் பூந்தமல்லி செங்குன்றம் கானாத்தூர் நசரத்பேட்டை ஆகிய 8 இடங்களில் சோதனை சாவடி அமைத்து சென்னை போலீசார் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக கோபமடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் விதமாக பேருந்து மற்றும் ரயில் மீது கற்களை வீசி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சென்னையில் ஒன்று கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவி கண்காணிப்பதற்காக ஐந்தாயிரம் காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.

ஒரு நாள் போராட்டத்திற்கு இந்த நிலை என்றால் மொத்தம் ஐந்து நாள் போராட்டம் என்று அறிவித்திருப்பது அந்த கட்சி கார் வேன்களில் கொடி கட்டிக் கொண்டு கிளம்பியிருந்தால் காவல்துறையினர் பிடித்து விடுவார்கள், ஆகவே கட்சியின் டி ஷர்ட் போட்டுகொண்டு வராமல் பேருந்துகளில் வர தெரிவித்திருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள். உளவுத்துறை மூலமாக இதை அறிந்து கொண்ட காவல் துறையினர் பேருந்துகளில் ஒருவரை விசாரித்து அங்கே கைது செய்து விடுகிறார்கள். தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு அந்த கட்சியினரை கைது செய்திருக்கிறார்கள்.

இரவுக்குள் எப்படியாவது சென்னைக்குள் கட்சியினரை கொண்டு வந்துவிட வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் பறந்து இருக்கின்றது. ஆனால் காவல் துறையினர் விடிய விடிய நடத்திய அதிரடி வேட்டையில் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது. சென்னையை ஸ்தம்பிக்க வைக்க பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டு இருந்தாலும், அதனால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடும் என்ற காரணத்தால் உசார் நிலையில் இருந்திருக்கின்றது காவல்துறை. இந்த நிலையில் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை சென்னையில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் இருக்கின்ற டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருந்த நிலையில் இந்த மாதம் 31 ஆம் தேதி வரையில் சென்னையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பது  அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்திருக்கின்றது. போராட்டத்தை முன்னெடுத்து போய்க்கொண்டிருந்த அன்புமணி ராமதாசுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.