தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!!

0
232
action-will-be-taken-against-companies-that-do-not-give-holidays-on-election-day-election-officer
action-will-be-taken-against-companies-that-do-not-give-holidays-on-election-day-election-officer
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!!
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க நாளையே கடைசி நாள் என கூறிய அவர்,  தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம்  என கூறியுள்ள அவர்,  மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4190க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். .
Previous articleதமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..??
Next articleஇளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!