பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு!

Photo of author

By Parthipan K

பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு!

Parthipan K

பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு!

கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதில், டிசம்பர் 25ந்தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்ததையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.