நடிகர் ஆர்யா மீதான வழக்கு முடிவுக்கு வந்தது! யார் குற்றவாளிகள் தெரியுமா?

Photo of author

By Parthipan K

நடிகர் ஆர்யா மீதான வழக்கு முடிவுக்கு வந்தது! யார் குற்றவாளிகள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர்.இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது.தமிழ் சினிமாவில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இயல்பாகவும் பழகக் கூடியவர் நடிகர் ஆர்யா.இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு சத்யா என்ற தம்பியும் உள்ளார்.சத்யா தமிழ் சினிமாவில் அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு அதை ஏமாற்றிவிட்டதாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார்.மேலும் அந்த பணத்தை அவர் தவணை முறையாக தன்னிடம் வாங்கினார் என்றும் அவர் போலிசாரிடம் புகார் தெரிவிதுள்ளார்.

இதனிடையே இந்த வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.சென்ற வாரம் நடிகர் ஆர்யாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.இதனால் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது போல் தான் எந்த பெண்ணிடமும் கூறவில்லை என்றும் அந்த பெண்ணிடம் பணம் எதுவும் வாங்கி ஏமாற்றவில்லை என்றும் விளக்கம் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து விசாரணை முடிந்த பின்னர் வெளியேறிய ஆர்யாவை செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது செய்தியாளர்களை சந்திக்காமல் உடனே அந்த இடத்தில இருந்து கிளம்பினார்.இந்நிலையில் அவர் மீதான வழக்கை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் போலிசாருக்குக் கிடைத்தது.நடிகர் ஆர்யாவைப்போல் தொலைபேசியில் பேசி இரு நபர்கள் இந்த செயலை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது.முகமது அர்மான் மற்றும் உசைனி ஆகியோர் நடிகர் ஆர்யாவின் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றை துவங்கி அதன் மூலம் பல பெண்களை ஏமாற்றியதாக தெரிகிறது.

இந்த வழக்கில் அந்த இரு நபர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் நடிகர் ஆர்யா பணம் பெட்ட்ரவல்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் போலிசாரிடம் கூறியுள்ளார்.