விடாமுயற்சி திரைப்படம் வெளிவருமா என லைக்கா நிறுவனத்திற்கு கால் செய்த நடிகர் அஜித்!!

Photo of author

By Gayathri

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் தான் விடாமுயற்சி. நடிகர் அஜித் அவர்கள் அடுத்த வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடையும் கேட்கப்பட்டு வருகிறது.

தீபாவளி அன்று இந்த படத்தின் டீசர் ஆவது வெளிவரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. உண்மையில் ரசிகர்களின் மனநிலை தற்பொழுது எங்களுக்கு விடாமுயற்சி படமே வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றன.

மேலும் விடாமுயற்சி திரைப்படம் ஆனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது என்றுதான் கூற வேண்டும். இந்த படம் வருகிற கிறிஸ்மஸுக்கு ரிலீஸ் ஆகும் என்று அர்ஜுன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இவர் மட்டுமின்றி, நடிகர் அஜித் அவர்களோ பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீஸ் செய்து ஆக வேண்டும் என்று நினைக்கிறார் போலும். ஆனால் தற்போது வரையில் இப்படம் குறித்த எந்தவித தகவலும் பெரிதளவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பொங்கல் அன்று நடிகர் அஜித் அவர்களின் குட் பேட் அக்லி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஒரே நேரத்தில் நடிகர் அஜித்தின் உடைய இரண்டு படங்களும் திரைக்கு வர முடியாது என்பதால் விடாமுயற்சி படம் உங்களுக்கு வெளிவிடப்படாது என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில் தான், அஜித் தற்போது லைகா நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விடாமுயற்சி படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்பதை பற்றி அஜித் லைக்காவிடம் பேசியிருப்பதாகவும், சீக்கிரம் விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.