தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், தனது ரசிகர்களால் ”தல அஜித்“ என்று கெத்தாக அழைக்கப்படுவார். இவருக்கு நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேஸ், ட்ரோன், குட்டி ஏர் கிராஃப்ட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்.
இவர் தற்போது ட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தக்ஷா குழுவினருக்கு அஜித் வழிகாட்டிவருகிறார். அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய ட்ரோன்கள் விருதுகளை வென்றுள்ளன.
ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவை கிருமி நாசி தெளிக்கவும், கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலகட்டத்தில் அஜித் ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி ஏர்கிராப்ட்டை தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த குட்டி விமானத்தை அஜித், பத்திரமாக தரை இறங்க வைத்துள்ளார்.
அந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..