Actor Allu Arjun: கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜர் .
இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா-2 இந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தெலுங்கானாவில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. அதாவது, டிசம்பர்- 5ஆம் தேதி உலக அளவில் புஷ்பா-2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது.
அதை காண தன குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்தார் 35 வயதுடைய ரேவதி என்ற பெண். அப்போது அந்த திரையரங்கிற்கு புஷ்பா-2 திரைப்பட குழுவினருடன் சேர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் வருகிறார் என்ற தகவல் பரவியதை அடுத்து கட்டுக்கடங்காத கூட்டம் அந்த திரையரங்கில் கூடியது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் வருகை புரிந்த போது கூட்ட நேரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரேவதி.
அவரது மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவருக்கு தற்போது மூளை சாவு அடைந்து இருக்கிறார். இதன் காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைத்து இருந்தர்கள். அதன் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பி அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீச்சில் ஈடுபட்டார்கள் அவர்களும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அந்த பெண் உயிரிழந்து இருப்பதற்கு காவல்துறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விலை என்றும், திரையரங்கு நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என பாஜக நிர்வாகிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்து வருகிறார்கள். இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 50 லட்சம் புஸ்பா திரைப்பட குழு சார்பாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், நடிகர் அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் 25 லட்சம் கொடுத்து இருக்கிறார். கூட்டநெரிசல் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஒருவர் மீது அனைத்து குற்றங்களையும் சுமத்துவது முறையாக இல்லை என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.