Actor Allu Arjun: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று புஷ்பா 2. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இருக்கிறது. திரைப்படம் வெளியாகி குறைந்த நாட்களில் 1000 கோடியை வசூல் செய்த முதல் இந்தியப் படமாக இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியானது.
அந்த சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருகை புரிந்தார். இதனால் திரையரங்கு வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் நடத்திய இருக்கிறார்கள். அப்போது கூட்ட நேரிசலில் சிக்கி பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்து இருக்கிறார்.
ஒரு அசைவும் இன்றி இருந்த அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிபிஆர் முதலுதவி கொடுத்து இருக்கிறார்கள்.இருந்த போதும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய விசாரணையில் தில்சுக் நகரை சேர்ந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்தது இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. பெண் உயிரிழந்ததற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இச் செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.