இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

Photo of author

By அசோக்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

அசோக்

manoj

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை.

தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் நடித்தார். துவக்கத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்த மனோஜ் ஒரு கட்டத்தில் கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார்.

manoj

அப்பா பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தையும் மனோஜ் இயக்கினார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த சில வருடங்களில் சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் மனோஜ் பார்த்து வந்தார். அதேநேரம், 2022ம் வருடத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், தற்போது அவர் மரணம்டைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக சொல்லப்படும் நிலையில், சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று மாலை 6.30 மணியளவில் அவர் மரணமடைந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரின் இரங்கலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.