1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியவர் வாகை சந்திரசேகர். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தன்னுடைய சிறுவயதிலிருந்தே திமுகவின் மீது பற்று கொண்ட இவர் இன்று வரையில் திமுகவில் உறுப்பினராக திகழ்ந்து வருகிறார் என்பதும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
சூது கவ்வும் 2 திரைப்படத்தில் வாகை சந்திரசேகர் அவர்கள் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய இவர் கலைஞர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
கலைஞர் குறித்து வாகை சந்திரசேகர் அவர்கள் பேசியிருப்பதாவது :-
ஒருமுறை கலைஞர் அவர்கள் வாகை சந்திரசேகர் அவர்களை தூக்கும் மேடை திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்திருக்கிறார். மேலும் சிவாஜி, எஸ் எஸ் ராஜேந்திரன் இவர்களுக்கு அடுத்து தமிழில் வீர வசனங்களை உச்சரிப்புடன் பேசுவதில் உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறி தூக்கு மேடை திரைப்படத்தில் நீ நடிப்பதாக தெரிவித்தால் உனக்காக நிறைய வசனங்களை நான் எழுதி இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த திரைப்படத்தில் நீ நடிப்பதன் மூலம் உனக்கு நிறைய எதிர்ப்புகள் வரும் என்றும் கலைஞர் அவர்கள் கூறியிருக்கிறார். அதற்கு வாகை சந்திரசேகர் அவர்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை. எனக்காக நீங்கள் வசனம் எழுதும் பொழுது எது வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். கூறியது போலவே இத்திரைப்படம் வெளிவந்த பிறகு வாகை சந்திரசேகர் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வந்துள்ளன.
குறிப்பாக, தூக்கு மேடை திரைப்படத்தில் 20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்து அசத்தி காட்டியவர் வாகை சந்திரசேகர் என்று கூறும் அளவிற்கு புகழின் உச்சத்தை அடைந்த தருணமாக இத்திரைப்படம் அமைந்தது. திரைப்படத்தில் நடித்ததற்காக இவரை கட்சி சார்ந்த நடிகர் என கூறியதால் திமுக அரசால் இவருக்கு எம்எல்ஏ பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.