நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

0
147

நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.’சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான இவர் தெகிடி,ஓ மை கடவுளே,போர் தொழில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றார்.தற்பொழுது ப.ரஞ்சித் இயக்கத்தில் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதென்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.தமிழில் 90 கால கட்டங்களில் ஊமை விழிகள்,கோட்டை,இணைந்த கைகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து நம் அனைவருக்கும் பரிட்சயமான நடிகரும், தயாரிப்பாளருமாக இருக்கும் அருண் பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் வருகின்ற செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி கரம் பிடிக்க உள்ளார்.

 

கீர்த்தி பாண்டியன் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதையடுத்து தற்பொழுது அசோக் செல்வனுடன் ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கின்றது.இந்த தகவலால் அசோக் செல்வனின் பெண் ரசிகைகள் சோகத்தில் இருக்கின்றனர்.

Previous articleஅமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
Next articleஅதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!