ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

Photo of author

By அசோக்

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

அசோக்

Updated on:

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார்.

அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. 2026ல் தேர்தலில் போட்டியிட்டு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் விஜயின் எண்ணமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் 2026ல் திமுக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என பேசியிருந்தார். மேலும், ‘முத்துவேல் கருணாநிதி அவர்களே.. வீராப்பாக பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும்’ என சொல்லியிருந்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக – திமுக இடையேதான் போட்டி எனவும் சொன்னார். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், திமுக ஆதரவாளாரும், நடிகருமான போஸ் வெங்கட் திமுக விழா ஒன்றில் பேசிய போது ‘கலைஞர் கருணாநிதி 14 வயதில் கதை எழுதி கொண்டிருந்தார். திமுக கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து நாடகம் போட்டார். அப்போதே அவருக்கு அண்ணாவையும், பெரியாரையும் தெரிந்திருந்தது. அவரின் மகன் ஸ்டாலின் 14 வயதில் தனது அப்பா கலைஞர் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களிடம் அரசியல் பேசியதை பார்த்துகொண்டிருந்தார்.

ஆனால், ஜோசப் விஜயான நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. உங்கள் அப்பா சினிமாவுக்கு கதை எழுதி கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள்.. 25 வயதில் சினிமாவில் நடித்து கொண்டிருந்தீர்கள்?.. நீங்கள் திமுகவை எதிர்க்கிறீர்களா?.. வாரிசு அரசியல் என சொல்கிறீர்களே.. நீங்கள் வாரிசு இல்லையா?.. உங்கள் அம்மா, மாமா, சின்னம்மா, தாத்தா, அப்பா என எல்லாமே சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. நீங்கள் சினிமா வாரிசு’ என பேசியிருந்தார்.