பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 650 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 13 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 42 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ராஜ்யசபா எம்பி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 3 கோடி ரூபாய் தனது தொகுதி நிதியில் இருந்து வழங்கியிருந்தார். இதனை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரம் பவன் கல்யாண் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக கூறியுள்ளார். அதில் மத்திய அரசுக்கு 1 கோடி ரூபாயையும், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் இந்த செயலை பாராட்டி பொது மக்கள் #PawanKalyalforPeople என்று டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த ட்ரெண்டிங் 25 ஆயிரம் டுவிட்டுகளை கடந்து உலக அளவில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.