டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

0
263
#image_title

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்.

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியும் இயக்குநர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமடைந்து பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் கவின்.

இவர் முன்னதாக நட்புனா என்னானு தெரியுமா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பிறகு சில படங்களில் சிறு கதாப்பாத்தியங்களில் நடித்த இவர் லிப்ட் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இந்த ஆண்டு இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. டாடா படத்திற்கு பிறகு நடிகர் கவின் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இதற்கு மத்தியில் நடன இயக்குநர் சதீஸ் மாஸ்டர் இயக்கப் போகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவி வந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் தள்ளிப் போக நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த இயக்குநர் வேறு யாரும் இல்லை. இயக்குநர் எலன் அவர்கள்தான் நடிகர் கவின் அடுத்து நடிக்கப் போகும் திரைப்படத்தை இயக்கப் போகிறார். இயக்குநர் எலன் ஏற்கனவே நடிகர் ஹரீஸ் கல்யான் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Previous articleபொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!
Next articleபிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!