நிறத்தை சுட்டிக்காட்டி அவமானப் படுத்தப்பட்ட நடிகர்!! உனக்கு ஜோடி என் மகளா எனக் கேட்ட தாய்!!

Photo of author

By Gayathri

நடிகை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஜெ ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்தார். அதிலும் தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் சோபன் பாபு அவர்களுடன் ஒரு படத்தில் நடிக்க ஜெயலலிதா அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் தாயார் உன்னுடைய நிறத்திற்கு என் மகள் உன்னுடன் நடிக்க வேண்டுமா என கேட்டு அவரை அவமானப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகர் சோபன் பாபு அவர்கள் ஒரு சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நாடகங்கள் பலவற்றில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால் சினிமா துறையில் நுழைந்தவர்.

நுழைந்த உடனேயே யாருக்கும் கதாநாயகன் இடம் கிடைப்பதில்லை. அப்படித்தான் இவருக்கும் முதலில் சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்த இவர் தன்னுடைய திறமையை நிரூபித்து ஹீரோவாக அவதரித்தார். இவருக்கென தெலுங்கு திரையுலகில் பெண் ரசிகைகள் அதிகமாயினர் என்று கூறப்படுகிறது.

சோபன் பாபு அவர்கள் சினிமா திரையுலகில் மிகவும் நேசித்த மற்றும் மதித்த நடிகைகளில் ஜெயலலிதாவும் ஒருவர். தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன கிருஷ்ணா அவர்களுடன் சோபன்பாபு இணைந்து நடித்த முதல் துப்பறியும் படம் ” குடாச்சாரி 116 “. இந்த படத்தில் தான் ஷோபன் பாபு அவர்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அவரது தாயாரான சந்தியா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால் ஏழையாக இருந்து சினிமா துறையில் நடிக்க வந்துள்ள ஒருவருடன் என் மகள் நடிக்க வேண்டுமா ? என்ற கேள்வி எழுப்பியதுடன். என் மகளின் நிறம் என்ன ? அவரின் நிறம் என்ன ? அவருக்கு ஜோடியாக என் மகள் நடிப்பதா ? என்று மிகவும் கோபத்தோடு பேசி இருக்கிறார்.

ஆனால் உண்மையில் அன்று தயாரிப்பாளர் சோபன் பாபுவை ஜெயலலிதாவின் அம்மாவிடம் காட்டும் பொழுது அவர் வேலை செய்துவிட்டு வந்த அலுப்பிலும் , வெயிலில் இருந்து வந்ததால் சற்று நிறம் குறைந்து முகத்தில் எண்ணெய் வலிய நின்றுள்ளார். இதனைக் கண்ட ஜெயலலிதாவின் தாயார் மிகுந்த கோபம் கொண்டு அவரது மனம் புண்படும்படி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பேசியதோடு மட்டுமின்றி இப்படத்தினுடைய கதாநாயகனை நீங்கள் மாற்றினால் மட்டுமே உங்களுடைய படத்தில் என் மகள் நடிப்பார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் சோபன் பாபுவின் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. ஜெயலலிதாவின் தாயார் அவ்வாறு கூறியதால் சோபன்பாபுவை நீக்கிவிட்டு அவருடைய இடத்திற்கு கிருஷ்ணாவை வைத்து படம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவமானத்திற்கு பின்னர் சோபன்பாபு அவர்கள் படிப்படியாக தன்னுடைய சினிமா துறையில் தன்னை மேம்படுத்தி வளர்ந்தார். அந்த சமயத்தில் ஜெயலலிதா சோபன்பாபு உடன் நடிக்க சம்மதித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் இன் போது சோபன்பாபு மற்றும் ஜெயலலிதா அவர்கள் நெருங்கி பழகி வந்துள்ளனர். சோபன் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது என்றும் தன்னை அவமானப்படுத்திய வரையே தன் பின்னால் வர வைத்து சோபன்பாபு பழிவாங்கியதாகவும் மூத்த பத்திரிகையாளர் இம்மண்டி ராமராவ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.