முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா!! வெளிவந்த நியூ அப்டேட்!!

0
186
#image_title

முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா!! வெளிவந்த நியூ அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா அவர்கள் முதலமைச்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. இந்த படத்திற்கு யாத்ரா 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் YS ராஜசேகர ரெட்டி அவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரை நிகழ்வு யாத்ரா என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இந்த யாத்ரா திரைப்படத்தை இயக்குநர் ராகவ் இயக்கியிருந்தார்.

அடுத்து படமாகப் போகும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் வாழ்கை வரலாற்று படமான யாத்ரா 2 படத்தையும் இயக்குநர் ராகவ் அவர்களே இயக்கவ உள்ளார். யாத்ரா 2 திரைப்படம் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Previous articleஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!
Next article1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலுக்கு முற்றிலும் பாய் பாய்!!