ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

0
180

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களாக எந்தவொரு ஹிட் படமும் இல்லாமல் பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார்.

மங்காத்தா திரைப்படத்துக்குப் பிறகு மாநாடு திரைப்படம்தான் மீண்டும் இயக்குனர் வெங்கட்பிரபுவை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதையடுத்து இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான நடிகர் அருண் விஜய் அதிலிருந்து வெளியேறினார். அவர் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்துவதால் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த வில்லன் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த வில்லன் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் வெற்றிப்பட நாயகனாக வலம் வந்தார். அவர் நடித்த சிவா மனசுல சக்தி, கோ, நண்பன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நடித்த அனைத்துப் படங்களும் தோல்வி அடைய, அவரின் மார்க்கெட்டும் படுத்தது. இதையடுத்து இப்போது அவர் ஓடிடிக்காக ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் இனிமேலும் ஹீரோவாகதான் நடிப்பேன் எனக் காத்திருக்காமல் வில்லன் வேடத்துக்கு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

Previous articleசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!
Next articleராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!