21 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணையும் நடிகர்! தளபதி68 திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்!!

Photo of author

By Sakthi

21 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணையும் நடிகர்! தளபதி68 திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்!!

Sakthi

Updated on:

21 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணையும் நடிகர்! தளபதி68 திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்!!

 

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்நிற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக அவருடைய 68வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

 

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் தளபதி 68 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

 

இதற்கு மத்தியில் தளபதி68 திரைப்படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. சென்னை 28, வாமணன், கலகலப்பு 2, பட்டாம்பூச்சி போன்ற பல படங்களில் நடித்த நடிகர் ஜெய் அவர்கள் தளபதி68 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் விஜய் மற்றும் நடிகர் ஜெய் இருவரும் சேர்ந்து 2002ம் ஆண்டில் வெளியான பகவதி திரைப்படத்தில் நடித்திருந்தனர். பகவதி திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் தம்பி கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு நடிகர் ஜெய் மீண்டும் நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.