திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!

0
38

திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலினுள் மூழ்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகின்றது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலத்தில் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தாவிப்பர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

கேரளா மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பத்தினம் திட்டா, கோட்டயம்,  ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமைற அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே அங்கு டெங்கு மற்றும் பிற விஷக் காய்ச்சல்கள் பரவி வருவதால் சுகாதாரத்துறை கவனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

கேரள மாநிலம் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசி வரும் நிலையில் இந்த மீன்பிடி படகு விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை திருவனந்தபுரம் மாவட்டம் முதலைப் பொழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீன்பிடிக்க சென்றவர்களா என்று தெரியாத நிலையில் இந்த படகில் இருந்த நான்கு பேரும் கடலுக்குள் மூழ்கியதாகவும் அந்த நான்கு பேரில் புதுக்குறிச்சியை சேர்ந்த  குஞ்சு மேனன் என்பவர் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் கடலினுள் மூழ்கிய மூன்று பேரின் நிலைமை என்வென்று தெரியாமல் மீட்பு படையினர் அந்த மூன்று பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.