நடிகர் கரண் சினிமா வாழ்க்கையை விட்டு சென்றதற்கும் , நடிகர் கரணின் மேனேஜருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என பேசப்பட்டது உண்மையா என்பது குறித்தது போன்ற விஷயங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :-
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகர் கரன் என்றும் அதன் பின் தமிழில் துணை கதாபாத்திரங்கள் அதாவது விஜய் அஜித் போன்றவர்களுடன் நட்பாக பழகக் கூடிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன் பின்பு ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என ஒரு சில படங்களில் வெற்றி கொடுத்தாலும் அவருக்கு வில்லனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ஒருபுறம் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட கரன் மற்றொரு புறம் நடிகர் கரணின் மேனேஜர் ஒரு பெண் என்பது இவர் சினிமா துறையை விட்டு செல்வதற்கு முக்கிய காரணம் என தெரிவித்திருக்கிறார். அதாவது நடிகர் கரண் எங்கு சென்றாலும் அவருடைய மேனேஜர் லட்சுமி அவர்களும் கூட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே மேனேஜர் என்றால் எந்த நேரமும் கூடவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் இதனை சுற்றி இருந்து பார்த்தவர்கள் தவறாக நினைத்து அதனால் நடிகர் கரணியினுடைய சினிமா வாழ்க்கை முடிந்து போனதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் கூறியிருக்கிறார்.
ஒருமுறை கரணின் மேனேஜர் லட்சுமி அவர்கள் தனக்கு அழைத்ததாகவும் அப்பொழுது தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துதாகவும் கூறியிருக்கிறார். அவரை அழைத்து பேசிய பொழுது திடீரென கரன் அவர்கள் தன்னிடம் பேசவில்லை என்றும் யாரோ தவறாக கூறி விட்டார்கள் போல என்றும் தெரிவித்து இருக்கிறார் அதன் பின் தான் அவர்களுக்கு ஆறுதல் அளித்து தைரியம் கூறி திருப்பி அனுப்பியதாக மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு காரணங்களுமே நடிகர் கரண் தன்னுடைய சினிமா வாழ்க்கையை விட்டு முழுவதுமாக வெளியேற காரணமாக உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.