சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்த நடிகர் கார்த்தி!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
50
#image_title

சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்த நடிகர் கார்த்தி!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை நடிகர் கார்த்தி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த 2022வது வருடம் தீபாவளிக்கு வெளியானது. சர்தார் திரைப்படத்தில் லைலா, ராஷி கண்ணா, முனிஸ்காந்த், ரெஜிசா விஜயன், யூடியூப் பிரபலம் ரித்விக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர் கார்த்தி அவர்கள் சர்தார் திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்று சென்ற வருடமே வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் சர்தார் 2 திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி அவர்கள் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது சர்தார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்துள்ளது. இதையடுத்து நடிகர் கார்த்தி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “சர்தார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. இந்த தருணத்தில் சர்தார் திரைப்படத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். சர்தார் 2 திரைப்படம் விரைவில் உருவாக இருக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

சர்தார் திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சர்தார் திரைப்படம் உலக அளவில் 103.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகர் கார்த்தி அவர்கள் தற்பொழுது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.