கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

0
268

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இருந்தது. இவ்வாறு ஒரு திரைப்படம் வந்தால் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வழக்கத்தையெல்லாம் தகர்த்தெரிந்து இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் எப்போது கைதி 2 தொடங்கும் என தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி கைதி 2 படத்தைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “லோகேஷ் கனகராஜ் விஜய் சார் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கைதி 2 படத்தின் வேலைகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

Previous articleஉதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!
Next articleஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here