கார்த்தி போட்ட ட்வீட்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

கொரோனா காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா தற்சமயம் வீடு திரும்பி இருப்பதாக அவருடைய சகோதரரும் நடிகருமான கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சென்ற சில தினங்களுக்கு முன் தனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதோடு வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை எல்லோரும் உணர்ந்து இருப்போம் அச்சத்துடன் முடங்கி விட இயலாது. அதேசமயம் பாதுகாப்பும், கவனமும், தேவை என்று தெரிவித்ததுடன் அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த சகோதரர் நடிகர் கார்த்தி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் குர்ஆன் சிகிச்சை முடிவற்று சூர்யா வீடு திரும்பி விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார். சூர்யா சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தன்னை தனிமை படுத்தி கொண்டு இருக்கிறார். அவர் குணமடைய வேண்டும் என்று மக்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று பதிவிட்டு இருந்தார் கார்த்தி.